நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Monday, March 28, 2011

கொத்து பரோட்டா & மூன்று புத்தக வெளியீட்டு விழா படங்கள்

 அனைவரையும் வரவேற்கும் “ழ” பத்திப்பகத்தின் நிறுவனரில் ஒருவர் திரு- ஓ.ஆர்.பி .இராஜா
 புத்தகத்தை வெளியிடும் அகநாழிகைபொன்.வாசுதேவன்
 கேபிள் சங்கர் மற்றும் “ழ” பத்திப்பகத்தார்க்கு மலர்செண்டு கொடுக்கும் கவிஞர் நேசமித்ரன்

 வாழ்த்துரையில் “அகநாழிகைபொன்.வாசுதேவன்
 நிகழ்ச்சியை நயமாகவும், நகைச்சுவையுடனும் தொகுத்து வழங்கும் எழுத்தாளர் சுரேகா.
 தனது வாழ்த்துக்களை பதிக்கும் எழுத்தாளர் நேசமித்ரன்
 கேபிள் சங்கரிடம் தங்களின் நட்பின்  நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் எழுத்தாளர் விஜய்மகேந்திரன்

நன்றியுரையாற்றும் கொத்துபுரோட்டா நாயகன் கேபிள் சங்கர்!
“ழ”பதிப்பகத்தின் நான்கு புத்தகங்களுக்கான வெளியீட்டு நிகழ்வு இனிதே நிறைவேறியது. ராஜமாணிக்கம், ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார், பொன்.வாசுதேவன், சாமிதுரை, ஆகியோர் ஆளுக்கொரு புத்தகங்களை வெளியிட, லக்கி, முத்து, நேசமித்ரன், மணிஜி ஆகியோர் முறையே ஆளுக்கொரு புத்தகங்களை  பெற்றுக்கொண்டனர், நிகழ்வு  சிறப்பாக நடந்தேறியது.
நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக  நண்பர் சுரேகா தொகுத்தளித்தார்.   ஒரு சந்தோஷ விஷயம் புதிய எழுத்தாளராய் அவதரித்திருக்கும் நண்பர் என்.உலகநாதனின் புத்தகங்கள் இது வரை ஆன்லைனில் என்பதுக்கும் மேல் புக் ஆகியிருப்பது மகிழ்ச்சிக்குறிய விஷயம். அது மட்டுமில்லாமல் கே.ஆர்.பி செந்திலின் பணம், என்னுடய் கொத்து பரோட்டாவுக்கும் கிடைத்திருக்கும் ஆதரவும் நம்பிக்கைத் தருகிறது. பதிப்பகத்தையும், எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும்  பொருட்டு  சென்னை  எல்டெக் நிறுவனர் திரு. ஜெயபால் அவர்கள் எல்லாப் புத்தகங்களிலும் நூறு பிரதிகளை  புக் செய்து  அசத்தினார். அவருக்கு ஒரு சபாஷ்! .  மற்றும் கலந்து கொண்ட அத்துனை இனிய நெஞ்சங்களுக்கும் நன்றிகள் பல.

Tuesday, March 15, 2011

தோழர் விஜய பாஸ்கரன் நினைவஞ்சலி


சரஸ்வதி பத்திரிகையை 1955ல் துவங்கியவரும், சோவியத்நாடு பத்திரிகை ஆசிரியர் குழுவின் ஆசிரியர்களில் ஒருவருமான தோழர் விஜயபாஸ்கரன் அவர்களுக்கு புகழாஞ்சலி கூட்டம் சென்னையில் கே.கே.நகர் டிஸ்கவரி புத்தகக்கடையில் நடைபெற்ரது. நிகழ்வுக்கு யுகமாயினி இலக்கிய இதழாசிரியர் சித்தன் தலைமை வகித்தார்.  எழுத்தாளரும், விஜயபாஸ்கரனின் சகோதரருமான  வ.மோகனகிருஷ்ணன் அறிமுக உரையாற்றினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் திருப்பூர் கிருஷ்ணன், சிகரம் செந்தில்நாதன், எம்.ஜி.சுரேஷ், பாரதிகிருஷ்ணகுமார், சௌரிராஜன், விஜயமகேந்திரன், அம்பத்தூர் ஆர்.துரைசாமி, கே.பன்னீர்செல்வம், தென்சென்னை மாவட்ட செயலாளர் எஸ்.ஏழுமலை, இசக்கிமுத்து, ஏ.ஏ.எச்.கோரி, தாழைமதியவன், குலசேகர்,மற்ரும் விஜயபாஸ்கரனின் சகோதரி குடும்பத்தினர், இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்று அவரது வாழ்வின் நிகழ்வுகளை நினைவுகூர்ந்தனர்.
சரஸ்வதி காலம் என்னும் மணிக்கொடி காலத்திற்குப்பின்பு, முற்போக்கு இடதுசாரிச் சிந்தனை, அழகியல் குறித்து விவாதித்து அவரது இலக்கியசாதனைகளை புகழஞ்சலி செலுத்தினார்கள்.
மூத்த இலக்கியவாதி தி,க,சி அவர்கள் விஜயபாஸ்கரன் குறித்தான நினைவுகளை கட்டுரையாக எழுதி அனுப்பியிருந்ததையும், திருச்சி உயிரெழுத்து இதழாசிரியர் சுதீர்செந்தில், தஞ்சை சௌந்திரசுகன் இதழாசிரியர் சுகன் அனுப்பியிருந்த அஞ்சல் கடிதங்களையும் திரு.சித்தன் வாசித்தார். திகசியின் கட்டுரை அமர்வில் விஜய்பாஸ்கரன் மீதான ஒரு முழுமையான தோற்றத்தை அளித்தது.  இலக்கிய உலகில் வருங்கால தலைமுறை விஜயபாஸ்கரனின் வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் சில தகுந்த திட்டங்களை செயல்படுத்திட வேண்டும் என ச.செந்தில்நாதன் அமர்வில் முன்வைத்தார்.