நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Wednesday, December 21, 2011

கமல் நம் காலத்து நாயகன்
கமல் நம் காலத்து நாயகன்

தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய ஒரு மகத்தான கலைஞனைப்பற்றிய பதிவு இது. ஒரு கலாச்சாரத்தின் உணர்வுகளைத் தீவிரமாகத் தொட்டுத் தழுவி தனது பன்முகத் தன்மைகொண்ட படைப்பாற்றலால் யாராலும் நகல் எடுக்க முடியாத ஒரு தனித்துவமான அழகியலை உருவாக்கியவர் கமல்ஹாசன். மணாவின் கடும் உழைப்பினால் உருவான இந்த அரிய தொகுப்பில் கமல் நம்மோடு பேசுகிறார், கமலைப்பற்றி தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகள் நம்மிடம் பேசுகிறார்கள். இது கமலின் சரித்திரம் அல்ல, கமலின் வழியே உருவான ஒரு கலையின் சரித்திரம்.

அணிலாடும் முன்றில் / Anilaadum munril/ Na.muthukumar/ நா.முத்துகுமார்

அணிலாடும் முன்றில் / Anilaadum munril/ Na.muthukumar/ நா.முத்துகுமார்

நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமி இலக்கிய உலகிலும் திரைத்துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துகுமார்.
 கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாக சிதைந்து வரும் இன்றைய கால கட்டத்தில் குடும்ப உறவுகளின் உன்னதமான பண்புகளை இந்த நூலில் வடித்திருக்கிறார் கவிஞர்.
 கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் ஆனந்தம் எல்லை இல்லாத்தது. பொருளாதாரப் புயலில் சிக்கிச் சிதைந்த குடும்பங்கள், தனித்தனிக் குடும்பங்கள் ஆன பிறகு  மீண்டும் தங்கள் பழைய உறவுகளை நினைத்து ஏங்கி தவித்துக் கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
  இப்படி அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என உறவு விழுதுகளை தாங்கி நிற்கும் ஒரே ஆணி வேர் - அன்பு! இதன் அடிப்படையில், குடும்ப உறவுகளில் நிகழ்ந்த வாழ்வியல் உணர்வுகளை நவீனத் தமிழ் நடையில் அனுபவக் கட்டுரைகளாகச் செதுக்கி இருக்கிறார். ஆனந்த விகடனில் தொடராக வந்தபோது, மனம் நெகிழப் படித்த வாசகர்கள் பலர், தங்கள் உறவுகளைத் தேடிச் சென்ற அனுபவங்களை கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும், ஆனந்தக் கண்ணீர்விட்டுப் பதிவு செய்திருக்கின்றனர்.   தமிழ் இலக்கிய உலகில் குடும்ப உறவுகளைப் பற்றிய முழுமையான ஆவணமாக வெளி வந்திருக்கிறது  இந்த நூல்.

Monday, December 12, 2011

இலக்கிய உலகுக்கு புது வரவாக “நீட்சி”

 
 
 
 
 
இலக்கிய உலகுக்கு புது வரவாக “நீட்சி” என்ற சிற்றிதழ் கோவையிலிருந்து வெளிவந்துள்ளது. ஆசிரியர் பாலை நிலவன். 150 பக்கங்களைக் கொண்ட, பெரிய அளவிலான மிக நேர்த்தியான வடிவமைப்புடன் வந்துள்ள நீட்சி-யின் விலை  ரூ-100 ஆகும்.  இதழ் முழுக்க அணிவகுக்கும் நவீன ஓவியங்கள் நம்மை ஈர்க்கிறது. கவிதை, கட்டுரை,  சிறுகதை, மொழிபெயர்ப்பு, நாடகம்,  என தமிழின் முன்வரிசைப் படைப்பாளிகள் அனைவரும் பங்களித்துள்ளனர்.  பல புதிய படைப்பாளிகளின் அறிமுகமும் நீட்சியின் வழி கிடைக்கிறது எனலாம். 
இதழாசிரியர் பாலைநிலவன்.                           தொடர்புக்கு:                                                                                              
டிஸ்கவரி புக் பேலஸ்- 9940446650 discoverybookpalace@gmail.com

Wednesday, December 7, 2011

யுடான்ஸ் பரிசளிப்பு விழா!

அன்பார்ந்த சவால் சிறுகதைப்போட்டி வெற்றியாளர்களே,


ஏற்கனவே கோடிட்டிருந்தபடி பரிசளிப்பை ஒரு நிகழ்வாக நடத்திட யுடான்ஸ் விரும்புகிறது. இந்த மாதம் 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் துவங்கும் சிறிய விழாவில் போட்டியில் வெற்றிபெற்ற கதைகளுக்கான பரிசுகள் வழங்கப்படும். முதல் மூன்று இடங்களை வென்ற ஆறு பேர் மற்றும் ஆறுதல் பரிசு 9 இடங்களுக்கான வெற்றியாளர்கள் 8 பேர் (ஒரு வெற்றியாளர் இரண்டு ஆறுதல் பரிசுகளுக்கான இடங்களை வென்றிருக்கிறார்) ஆகிய 14 நண்பர்களையும் விழாவுக்கு அன்போடு அழைக்கிறோம்.

தாங்களே நேரில் வந்தால் மிக மகிழ்வோம். அதே நேரம் சூழல் அனுமதிக்காதவர்கள் தங்கள் சார்பாக பரிசுகளைப்பெற உறவினர், நண்பர்களை அனுப்பலாம். அதுவும் முடியாதவர்களுக்கு விழாவுக்குப் பின்னர் கூரியர் மூலமாக புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும். வரவிருப்பவர்கள் தங்கள் வரவை இந்த மெயிலுக்கு பதில்மெயிலில் உறுதிசெய்யுங்கள். விழா ஏற்பாட்டுக்கு அது உதவியாக இருக்கும். மற்றவர்கள் தங்கள் கருத்துகளை/ விபரங்களைப் பதிலாகத் தாருங்கள்.

போட்டிக்குழு அறிவித்தபடி 3000 ரூபாய்க்கான பரிசுகளோடு டிஸ்கவரி புக் பேலஸ் சார்பில் நண்பர் வேடியப்பன், நடுவர்களாக பங்கேற்ற நண்பர்கள் அனுஜன்யா, அப்துல்லா ஆகியோரும் தன்னார்வத்தில் ஒரு தொகையை பரிசுக்கென தந்து பங்கேற்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி. மேல் விபரங்கள் எனது/பரிசல்/கேபிள் பதிவுகளில் வெளியாகும்.

தொடர்பு எண்கள் :

ஆதி - 9789066498
கேபிள் சங்கர் -9840332666

விழா நடக்கவிருக்கும் முகவரி :


டிஸ்கவரி புக் பேலஸ்,
இலக்கம் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, வெஸ்ட் கே.கே நகர்,
சென்னை - 600078.  தமிழ்நாடு.
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)

நன்றி.

அன்புடன் -
ஆதிமூலகிருஷ்ணன் (குழுவுக்காக)

Thursday, December 1, 2011

சீனுராமசாமியின் “காற்றால் நடந்தேன்”-கவிதை தொகுப்பு குறித்து!

உயிர்மை-100
  உயிர்மையின் 100 வது இதழ் நேற்று (01/12/2011) தேவனேயப் பாவாணர் அரங்கில் நடந்தது. திட்டமிட்டபடியே அரங்கு நிறைந்த காட்சி என்பதுபோல அரங்கு நிறைந்த இலக்கியக் கூட்டமாக இருந்தது. உயிர்மையின் 100 வது இதழ் மிகவும் இலக்கிய ரசனையுடன் வெளிவந்துள்ளது. ஒரு படைப்பாளியிடம் ஒரு கேள்வி என, 100 படைப்பாளிகளிடம் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை சார்ந்த 100 கேள்விகளும்,  அதற்கான படைப்பாளர்களின் பதிலும்  இதழை  அவசியம் பாதுகாக்க வேண்டிய இதழாக மாற்றியுள்ளது எனலாம். சில புதிய படைப்பாளர்களையும் முக்கிய படைப்பாளர்களாக இதில் அங்கீகரித்துள்ளனர்.

காற்றால் நடந்தேன்
    தொடர்ந்து  இயக்குநர் சீனுராமசாமியின்  காற்றால் நடந்தேன் கவிதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா நடந்தது.  அர்த்தமுள்ள கவிதை  வரிகளை பவா செல்லதுரை, நடிகர் விவேக் போன்றவர்கள் சுட்டிக்காட்டி பேசும்போது  அரங்கில் அடிக்கடி கைத்தட்டல்களையும் காண முடிந்தது. நீண்ட நாளைக்குப் பின் கைத்தட்டல் வாங்கிய கவிதைதொகுப்பு வெளியீட்டு விழா இதுவாகத்தான் இருந்தது எனலாம்.
1 கோணம்

                  கரும்புக் காடு எரியுது
                  கரும்புக் காடு எரியுது

                  பதறிய மக்களின்
                  நடுவே செய்வதறியாது
                  சீனிப் புகையாக
                  கரும்பின் நறுமணம்
                  அவ்வெளியெங்கும்
                  திகைத்து நின்றது”

2. இணைபிரிவு

 கிழிந்த ரவிக்கையின்
மீதேறி இணைவை
அழுத்துகிறது
தையல் எந்திர ஊசி

சொற்கள் உடைந்து
பிளவுபட்ட தருணத்தில் 
பிரயோகிக்கப் பட்ட
நிகழ்வை மறைத்தபடி
படபடக்கின்றன
அதன் றெக்கைகள்!

3.ஒளிரும் உருவம்

                இராமேஷ்வரம் கடலைப் பார்த்து
                சதா குறைத்துக்கொண்டிருக்கிறது 
                ஒரு எல்லையோர நாய்

                ஒரு வேளை அதன்
                ஒளிரும் கண்களுக்குத்
                தெரிந்திருக்கக் கூடும்

                வசிப்பிடமின்றிக் கடலில் அலைந்து
                கொண்டிருக்கும்  உருவமற்ற
               எம் மக்களை!


இப்படி தொகுப்பு முழுக்க மெண்மையான, சிந்தனையைத் தொடும் கவிதைகள் நம்மை ஒரேமூச்சில் தொகுப்பை வாசிக்க வைக்கிறது. கவிதையைக் கண்டாலே காத தூரம் ஓடும் சூழலில் நம்மை கவிதையின் பக்கம் திரும்ப வைத்துள்ளார் கவிஞர் சீனுராமசாமி என்று துணியலாம்.  என்னைக் கேட்டால்,   நானும் கவிதை எழுதுகிறேன் என்று கவிதைத்தளத்தையே கருணையின்றி சிதைத்துக் கொண்டிருக்கும் புற்றீசல் கவிஞர்களுக்கும், பத்துமுறை படித்தபின்தான் கவிதையின் முதல் வரிக்கு ஒருவாறு அர்த்தம் புரியும்படி எழுதிவிட்டு,  மொத்த கவிதை உலகின் குத்தகை தாரர்களாக காட்டிக்கொள்ளும் அதிநவீன கவிஞர்களுக்கும் “காற்றால் நடந்தேன்” கவிதைத் தொகுப்பை  பாடமாக்கலாம் என்பேன்

 வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
பக்கம்  : 102
விலை : ரூ.80

(டிஸ்கவரி புக் பேலஸ்-ல் கிடைக்கிறது
தொடர்புக்கு= 9940446650)

Sunday, November 27, 2011

எக்ஸைல்

சாருநிவேதிதாவின் அடுத்த நாவல்- டிசம்பர் 6-ல் வெளியீடு


பணம் சம்பாதிப்பது எப்படி?. ஆரோக்யமாக வாழ்வது எப்படி?,  60 வயதிலும் 20 வயது இளைஞனாக வாழ்வது எப்படி?. வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்வது எப்படி உங்களுக்கு பிடிக்காதவர்களை உங்கள் மீது எப்படி வசியம் கொள்ளச் செய்வது எப்படி என்பது போன்ற உங்களின் நூற்றுக்கனக்கான கேள்விகளுக்கு இந்த நாவலில் பதில் இருக்கிறது. ஆங்கிலேயர் வரவால் காணாமல் போன இந்திய ஆன்மீக மரபின் சாரத்தை - தமிழ் சித்தர் மரபின் சாரத்தை நம் கைமேல் எடுத்துத் தருகிறது எக்ஸைல்.
 Autofiction என்ற இலக்கிய வகை உலகில்  ஃபிரஞ்சைத் தவிர வேறு எந்த மொழியிலும் இதுவரை எழுதப்பட்டது இல்லை. அந்த ஃபிரெஞ்ச் ஆட்டோஃபிக்‌ஷன் நாவல்களும் வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படவில்லை. அந்த வகையில் எக்ஸைல் தமிழில் எழுதப் பட்ட முதல் ஆட்டோஃபிக்சன் நாவல் எனலாம்.
 தமிழ் தெரிந்த ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய இந்த நாவல், இலகியமாக மட்டுமல்லாமல் ஒரு User Manual ஆகவும்,  உங்கள் வாழ்வுக்கான  ஒரு வழிகாட்டியாகவும் அமையும்.புத்தகத்தை ஆன்லைனில் வாங்கலாம் இங்கே

Saturday, November 5, 2011

Saturday, October 29, 2011

புதிதாக வலையேற்றம் கண்டுள்ள கண்ணதாசனின் புத்தகங்கள்


சேரமான் காதலி
 கவிஞரின் கதைகளிலே சொக்கி போயிருக்கிறோம் அவரது கட்டுரைகளிலே கர்வம் கொண்டிருக்கிறோம்.அவரது கதைகள் நம்மை கண்கலங்க வைத்திருகின்றன,அவரது சமூக நாவல்கள் நம் சிந்தனைக்கு விருந்தாகவும்,சீர்திருத்த வாளாகவும் விளங்கி இருகின்றன இவை அத்தனையும் ஓன்று சேர்த்தால் எப்படி இருக்கும் அத்தான் சேரமான் காதலி மேலும் படிக்க..     மனவாசம்
1961 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்பது க்கும் பிந்தைய நாளில் உள்ள எமது சுய சரிதை மனவாசம் என்ற தலைப்பில் கல்கி இதழில் வெளிவிடப்பட்டது.சொந்த நிறை குறைகளையும் தொழில் முறை ஏற்ற இறக்கங்களையும் தான் சார்ந்த கட்சிகளின் தலைவர்களால் தமக்கு ஏற்பட்ட பொருள் இழப்புகளையும், அதனால் தோன்றிய மன காயங்களையும் சுய விமர்சனம் செய்து கவிஞர் கவிஞர் சுய சரிதை எழுதியுள்ளார்.மேலும் படிக்க..வனவாசம்
1943-ல் இருந்து 1961 ஏப்ரல் வரை  என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியிருக்கிறேன்.எனது மேன்மைகள் என்று நான் கொரிபிடுபவற்றை நான் பயத்துடனே குறிப்பிட்டுள்ளேன்.ஒரு பெரிய அரசியல் தலைவனின் வரலாறும் அல்ல இது,ஒரு பெரிய கவிஞனின் வாழகையுமல்ல.வாழ்கை வலி போக்கன் ஒருவனின் உயர்வு தாழ்வுகளே இந்நூல்.ஏனென்றால்,என் காலத்துக்கு பிறகு இது ஓர் அதிசயமாக இருக்கும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு.-கண்ணதாசனமேலும் படிக்க..


                                 
அர்த்தமுள்ள இந்து மதம்   

  • எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன்., அதனால் இப்படித்தான் வாழவேண்டும் என்று அறிவுரை கூறும் அருகதை எனக்கு உண்டு" என்று ஆரம்பிக்கிறார்
  • 'இவர் கொஞ்சம் பேச மாட்டாரா?' என்று உலகத்தை ஏங்க வைக்க வேண்டும்.மேலும் படிக்க..

கண்ணதாசன் கதை  
தத்துவங்களை எளிய முறையில் பாமரனுக்கும் எடுத்து சொன்ன பெருமை கவிஞர் கண்ணதாசனுக்கு உண்டு. பள்ளிப் படிப்பை அவர் தொடரவில்லை என்றாலும், புத்தகப்படிப்பு அவரை வாழ்க்கையில் உச்சத்தில் உயர்த்தியது. கம்பராமாயணத்திற்கு தமிழில் உரை எழுதிய, அத்தனை உரை ஆசிரியர்களின் உரையை கண்ணதாசன் மனப்பாடமாகக் கூறுவார். மேலும் ..மேலும் படிக்க..


Thursday, October 27, 2011

7-ம் அறிவு - திரைவிமர்சனம்

கதை- அருமையான கதையாக  யோசித்திருப்பார்கள்
திரைக்கதை - முதல் 20 நிமிடம் உலகத்திரைப்படத்திற்கு இணையாக உள்ளது.

   ஆனால் அதன் பிறகு மிகவும் சிரமத்துடன் உட்கார வேண்டியுள்ளது. காதலை தவறாக , சுவாரஷ்யமில்லாமல் சொல்கிறார்களே என்று நினைக்கும் போது அது காதலே இல்லை என்று சொல்லி மேலும் ஏமாற்றுகிறார்கள்.  மற்றபடி- ஸ்ருதியும், இரண்டு சூர்யாவும்,  வில்லனும் அழகாக உள்ளனர். படம் எங்கு முடியும் என்று ஒருவாறு யூகிக்கும் போதே டபக்டீரென்று முடிகிறது.
வசனம்: சில இடங்களில் தமிழ் இன உணர்வை தூண்டுகிறேன் என்று முயற்சித்துள்ளார் இயக்குநர் முருகதாஸ். என் பங்குக்கு நானும் இரண்டு இடங்களில் விசில் அடித்து வைத்தேன்.  தெலுங்கில் டப் செய்யும்போதும் இதே தமிழ் உணர்வு குறையாமல் டப் செய்தால் உண்மையில் இயக்குநரை   பாராட்டலாம்.
இயக்கம்: அதிகமாக யோசித்து, அதிகமாக செலவு செய்து, அதிகமாக மெனக்கெட்டுள்ளனர்.  திருப்தி என்னவோ குறைவுதான்.

ஒளிபதிவு- சண்டைக்காட்சிகள் அருமை -பாடல்கள்  தனித்தனியாக தொங்கிக் கொண்டுள்ளது. படத்தில் ஒட்டவில்லை. !
,

Sunday, July 24, 2011

வேலுநாச்சியாரும் வேலுப்பிள்ளை பிரபாகரனும்


  கடந்த ஞாயிறு  காமராஜர் அரங்கில் மாலை 5 மணிக்கு வேலுநாச்சியார் நடன நாடகம்  என்று அனைத்து பத்திரிக்கையில் விளம்பரம் பார்த்திருக்கலாம். இதில் அனைவரும் வருக! என்ற வாசகம் என்னை ஈர்த்தது.  ஆர்வம் மேலிட ஆஜராகிவிடேன்.


வைகோ தான் இந்த நாடக ஆரங்கேற்றத்தின் சூத்திரதாரியாக இருந்து அனைத்து பொருட் செலவையும் ஏற்றுள்ளார். ஒவ்வொரு அரங்கேற்றத்திற்கும் குறைந்தது 5 இலட்ச ரூபாயாவது செலவாகலாம். சரி இப்போது  


இந்த நாடகத்தின் தேவை என்ன?, தேவை  இருக்கிறது.  அரங்கத்தில் நுழைந்துவிட்டால, வெளிஉலகில் நடக்கும் அனைத்து அட்டூலியங்கலையும் மறந்துவிடலாம். மானமும் வீரமும் மரக்கா எவ்வளவு என்று கேட்கும் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது தெரியும்.  அங்கு ஸ்பெக்ட்ரம் பிரச்சினையோ, பெட்ரோல் விலை உயர்வோ இல்லை, முழுக்க முழுக்க கி.பி.1750 களுக்கு சென்றுவிடுகிறோம். வேலு நாச்சியார் என்ற  பெண்ணின் வீரம் மட்டுமே தெரியும். மறந்து போன தமிழனின் வீர வரலாறும் திரும்ப வாசிக்கப் படுவது மட்டுமே கேட்கும். தன் கணவனை சூழ்ச்சியால் கொன்று சிவகங்கையை கைப்பற்றிய  வெள்ளையர்களை எதிர்த்து தாயகத்தை மீட்க தனிப்படையை அமைத்த முதல் வீரப் பெண் வேலுநாச்சியார். சுற்றியுள்ள தனித்தனி குறுநில மன்னர்களை ஒன்றாக்கியதுடன், ஹைதர் அலியை சந்தித்து படை உதவு கோரினார். எட்டு மொழியினை சரளமாக தெரிந்து வைத்திருந்த வேலுநாச்சியாரின் உருது மொழி புலமையை கண்ட ஹைதர் அலி மகிழ்ச்சியோடு 5000 குதிரைப் படையையும், ஒரு பீரங்கிப் படையையும் அனுப்பி வைத்தார்.    அவர்தான் உலகின் முதல் மனித வெடிகுண்டை தயாரித்து வெள்ளையனின் ஆயுதக் கிடங்கை அழித்தார். மருது சகோதர்ர்களின் துணையோடு மொத்தபடையையும் ஒன்றாக்கி சிவகங்கையை மீட்டுடார். 


தன்கணவனை கொன்ற வெள்ளைத் தலபதி உயிருக்கு பயந்து மன்னிப்பு கேட்கவும் மன்னித்து விட்டிருக்கிறார். இந்த வீரத்தை 200 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஈழப்போராட்டத்தில்தான் நாம் காணமுடிகிறது. வரலாறு திரும்பி இருக்கிறது. இப்படிப்பட்ட வீர மரபில் வந்த நாம்தான் இப்படி அமைதியாக கிடக்கிறோமா? என்று நாடகம் கேள்வி எழுப்புகிறது. வேலுநாச்சியார் என்பது இங்கு வேலுப்பிள்ளை பிரபாகரனே என்று வெளிப்படையாக பேச வைக்கிறது நாடகத்தின் தாக்கம்.
                             ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் எழுப்பப் படும் கைத்தட்டல்கள் இன்னும் நாடக வடிவம் மக்களை விட்டு நீங்கிவிடவில்லை       
                                         என்ற நம்பிக்கை தருகிறது.
       

                              முக்கியஸ்தர்களாக  கலந்துகொண்ட நடிகர் சிவக்குமாரும், இளையராஜாவும் நாடகத்தை     பார்த்து வியந்துபோனார்கள்.   

Thursday, June 30, 2011

புதிய வடிவில் எஸ்.ரா .வின் “யாமம்”தாகூர் விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்  அவர்களின் யாமம் நாவல் சில காலம் பிரதிகள் கிடைக்காமல் வாசகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். இப்போது முற்றிலும்  புதிய வடிவில் பளிச்சிடுகிறது யாமம்.   விலை ரூபாய் - 275 , தேவைக்கு இந்த  இணைப்பில் காணவும் http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D

Friday, June 17, 2011

அவன் - இவன் , விமர்சனம்

தலைப்பு ?.                 =  நல்லாருக்கு!
கதை ?                          =  அப்படி ஒன்னும் இல்லை, ஓவர்!
திரைக்கதை ?          =   கதையே இல்லைனு சொல்லிட்டேன் , அப்புறம் என்ன ?
வசனம்?                      =  ஒரே நாத்தம் புடிச்ச டாய்லெட்  நெடி தாங்க முடியில!
இயக்கம் ?                  =  வெறும் கைய முழம் போட எதுக்கு 2 வருசம்னு             தெரியல!
ஒளிப்பதிவு              =  துடைப்பத்துக்கு பட்டுக் குஞ்சம் கட்டுனா மாதிரி இருக்கு !
சிறப்புச் சாதனை 
ஏதாவது?                   =  ஜி.எம் . குமார் நிர்வாணமா நடிச்சிருக்கிறார். பாவம்   
                                              அவர்.   விழலுக்கு இரைத்த நீர் .
 சொல்ல வரும் நீதி      =  மீண்டும் ஜமீந்தார்கள் ஆட்சி வந்தால் மக்கள் திருடு, வழிபறி, குடி , கும்மாளம்னு   செழிப்போடு இருப்பார்கள்
Thursday, May 12, 2011

கோணங்கியின் கல்குதிரை குறித்து

நீல ரோஜ , தனிமை எனும் நாய் , சிவப்பு விளக்குகள், ரசோமான்,  உலக இலக்கியத்தில் ஜப்பானின் எரிமலை கல்லிருந்து உருவான சுழலும் சக்கரங்கள் குறுநாவல் வேனிற்கால கல்குதிரை இதழில் வெளிவந்துவிட்டது.  அதீத புனைவுலகம் பற்றி தன் விரிவான ஆய்வில் சேகுவேரா காரணமின்றி உயிதுறக்கவில்லை. என்கிறார் லத்தீன் அமெரிக்க இடதுசாரி கலைஞன் கொர்தசார்.  இந்த விரிவான கட்டுரையும், உலகில் இனி தோன்றப்போகும் நவ நாவல்குறித்து அலேன் ராத்கிரியே-யின் மிக நீண்ட உரையாடல் ஐரோப்பா  முழுவதயும் கடந்து செல்வதுடன். தென் அமெரிக்க கண்டத்தையும் ஊடுருவிச் செல்கிறது.  அத்துடன் பெண்கவிகளால் நெய்யப்பட்ட காற்று தமிழின் நெடுநல்வாடை யிலிருந்து வில்வரத்தினத்தின் காற்றுவழிகிராமம் வரை தாளம் படுமோ தறிபடுமோ யார்படுவார் (குயில் பாட்டு) என்பதாக நீள்கிறது... கல்குதிரை 18/19/20/ மூன்று இதழ்களும் சேர்ந்து ஒரே இதழாய் வெளிவந்துவிட்டது. - கோணங்கி 

Sunday, May 1, 2011

ஆனந்த விகடனின் புத்தக கண்காட்சி

ஆனந்தவிகனும் டிஸ்கவரி புக் பேலஸ்-ம் இணைந்து முதன் முறையாக டிஸ்கவரி புக் பேலஸ்-ல் புத்தக கண்காட்சியை நடத்துகிறது. ஐநூறுக்கும் பேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது. மே.1 முதல் மே 31-வரை நடக்கும்  இந்த கண்காட்சியில் அனைத்து புத்தகங்களுக்கும் 10% சிறப்புக் கழிவு உண்டு. வாசகர்கள் பயன் படுத்திக் கொள்ளவும்.  கழிவு  இல்லாமல் புத்தகங்களை தமிழ் நாடு முழுவதும் இலவசமாக கூரியரில் அனுப்பி வைக்கிறோம். 
முதலில் என்னென்ன புத்தகங்கள் எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்ற   discoverybookpalace@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். பின்பு புத்தகங்களை உறுதி செய்து நாங்கள் பதில் அனுப்பியதும்  கீழ் காணும் வங்கி எண்ணில் பணத்தை செலுத்திவிட்டு தகவல் அனுப்பினால் தங்களுக்கான  புத்தகம் உடனே அனுப்பப் படும்.
  •  Axis Bank  
  • Current A/C Name Discovery book palace 
  •  A/C No.909020039722744.
  •  IFC CODE- UTIB0000345
  • Branch. Mogapair East  Chennai- 600037    
 வேறு KVB, IOB, SBI  போன்ற வங்கிகளின் கணக்கில் பணம் செலுத்த விரும்பினாலும் தொடர்புகொள்ளவும் . அனைத்துவகையான தொடர்புகளுக்கும் 91 9940446650 என்ற எண்ணில் அழைக்கவும்.

Saturday, April 23, 2011

தமிழகம் வாசிக்கிறது

”  நகைக்கடைகளை விடவும் புத்தகக் கடைகளில் அதிக விற்பனையும் லாபமும் கிட்டுகின்றன.”

என்ன மூச்சு நின்று விட்டதா?. என்னைக் கொன்றே போடலாம் என்று தோன்றுகிறதா?.

ஜனத்திரள் நிரம்பி வழியும் புத்தகக் கடைகளைப் பார்க்க ஏக்கமாய்த்தான்
இருக்கிறது.வருடத்திற்கு ஒரு முறையேனும் நகைக்கடைக்கு, ஆறேழு முறையேனும்
துணிக்கடைக்கு குடும்பத்தோடு போகும் நாம் மொத்த ஆயுளில் எத்தனை முறை
குடும்பத்தோடு புத்தகக் கடைக்குப் போகிறோம்? ஜூன் மாதத்தில் குழந்தைகளின்
பாடப்புத்தகங்களுக்காக புத்தகக் கடை வரிசைகளில் நிற்பதோடு நமக்கும்
புத்தகக் கடைகளுக்குமான உறவு சுருங்கிப் போகிறது.

“படித்து முடித்துவிட்டு சும்மா இருப்பதாகச்” சொல்லிக் கொள்கிற அவலம்
தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமே உரியது. பத்தாம் வகுப்பில் முப்பத்தொன்பது
சதம் மதிப்பெண்களோடு தேற்சி பெற்றவன் ஏதோ தான் படித்துக் களைத்துவிட்ட
களைப்பை உணர்வது என்பதும் நமக்கே உரிய சோகம்.

படித்தவன் எப்படி சும்மா இருக்க முடியும்? சும்மா இருப்பவன் எப்படி
படித்தவனாக முடியும்?

எதார்த்தம் இப்படி பல்லை இளித்துக் கொண்டு நிற்க, நகைக் கடைகளைவிடவும்
புத்தகக் கடைகளில் அதிக விற்பனையும் அதிக லாபமும் எப்படி?

27.04.1997 தினமணியில் வந்துள்ள அறிஞர். தமிழண்ணல்  கட்டுரையின்
ஒருவரிதான் இந்தக் கட்டுரையின் தொடக்க வரி. இடைத் தொண்ணூறுகளில்
“அமெரிக்கா வாசிக்கிறது” என்கிற இயக்கம் லட்சோப லட்சம் டாலர்கள் செலவில்
தொடங்கப்பட்ட செய்தியும் நமக்கு கட்டுரையில் கிடைக்கிறது.

கற்றலும் வாசித்தலும் நுகர்பொருட்களே. அரசாங்கங்கள் இதற்கெல்லாம் மானியம்
ஒதுக்கக் கூடாது . மீறி ஒதுக்கினால் உலக வங்கி நிதியுதவி நிறுத்தப் படும்
என்று நேரடியாகவும் தனது எடுபிடியான உலக வங்கி மூலமாகவும் உலக
நாடுகளுக்கெல்லாம் குறிப்பாக வளரும் நாடுகளுக்கு உத்தரவு போட்டு அதில்
பெருமளவு வெற்றியும் பெற்றுள்ளது அமெரிக்கா.

பிசகற்று நுணுகினால் ஒரு உண்மை புரியும். கல்வி விலை பொருளானால்
இருப்பவன் மட்டுமே கல்வியை வாங்க முடியும். கற்றலுக்கும் வாங்கலுக்கும்
உள்ள இடைவெளி ஒரு குறுநூல் அளவுக்கு நீளும்.  கல்வியை காசின்றி கற்க
மட்டுமே முடிந்த உழைக்கும் , ஏழை, ஒடுக்கப் பட்ட பகுதி மக்களால்
கல்வியைக் காசு கொடுத்து வாங்க முடியாது. மத்தியத் தரவர்க்கத்தை இது
சற்று தாமதமாகத் தாக்கும்.

ஆக, மேற்சொன்ன உழைக்கும் மக்களிடம் இருந்து கல்வி களவு போகும். படித்தப்
பணக்காரனுக்கு தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்க முடியும். எனவே அடங்குதல்
அவனது இயல்பாகப் போகும். ஆகவே பணக்காரன் படிப்பதால் அமெரிக்காவிற்கு
ஆபத்தில்லை. ஆனால் , உழைப்பவன் படித்துத் தேர்ந்தால் அவனை அடக்க இயலாது.
கலியைப் பள்ளியிலிருந்து சந்தைக்குத் திருப்பாமெரிக்கா விரும்புவது
இதனால்தான். ஆனால் அமெரிக்கன் தடையின்றி செலவின்றி நிறைய வாசித்துவிட
வசதி செய்வதுதான் “ அமெரிக்கா வாசிக்கிறது” இயக்கத்தின் னோக்கமாக இருக்க
முடியும்.

தன் எல்லைக்கு எஞ்சிய உலகத்தில் அடிமைகள் மட்டுமே குவிந்துகிடக்க
ஆசைப்படும் அமெரிக்கா, குறைந்த பட்சம் தனது குடிகளாவது அறிவார்ந்து
இருக்க வேண்டுமென ஆசைப் படுவதற்காக நாமும் அவசரமாக அமெரிக்காவை ஒருமுறை
பாராட்டி விடலாம். அமெரிக்காவைப் பாராட்ட எஞ்சிய நம் வாழ்வில் வாய்ப்பே
கிட்டாமலும் போகலாம்.

பெசில்வேனியா பல்கலைகழகத்தில் இன்று வெளிவந்த தமிழ் நூல்களும் பைண்டு
செய்யப்பட்டு , தூசு தட்டப்பட்டு அடுக்கி வைக்கப் பட்டுள்ளன.7,56,640
சதுராடிப் பரப்பளவில் பன்னிரண்டு தளங்களில் சிகாகோ நூலகம் இயங்குகிறது
போன்ற தகவல்களும் தமிழண்ணல் கட்டுரையில் கிடைக்கின்றன.

இதில் நமக்கும் மகிழ்ச்சிதான். நமது வருத்தெமெல்லாம் அமெரிக்காவின்
உத்தரவுக்கு கீழ்ப்படிந்து வளரும் நாடுகள் நூலகத்திற்கான செலவை
நிறுத்திக் கொண்டதுதான்.

இன்று வெளிவந்த நூல்களும் வாங்கப் பட்டு, பைண்டு செய்யப்பட்டு சுத்தமாக
பாதுகாக்கப் படுகின்றன அங்கே. தமிழகத்து நூல்னிலையங்களில் தமிழ் நூல்கள்
நுழையப் படும் அவஸ்தை நம் நெஞ்சில் வலியைத் தருகிறது.

சமீப காலமாக தமிழகத்தில் வாசகத் தளம் நீண்டுகொண்டுமிருக்கிறது.
அகன்றுகொண்டுமிருக்கிறது. களகட்டும் புத்தகக் கண்காட்சிகள் இதற்கு
சான்று. ஆனால், பெருகியுள்ள மக்கட் தொகையோடு விகிதாச்சாரப் படுத்த இந்த
விரிதல் மிக மிகக் குறைவுதான். இந்த முரண்பட்ட விகிதாச்சாரத்தை
நேர்படுத்த ஓரளவு பலம் கொண்ட சக்தி நூலகம்.

தமிழன் வாசிக்க வேண்டும் என்று நாம் ஏன் முட்டிக்கொள்ள வேண்டும்?

“தான்” சார்ந்த சிந்தனையை “சமூகம்” சார்ந்த சிந்தனையாக புத்தகங்கள் மாற்றிவிடும்.

ந.முருகேசபாண்டியன் அவர்கள் 1984 ல் ஈழ விடுதலைக்ககப் போராடும் ஒரு
ராணுவக் குழுவின் தலைவரைச் சந்திக்கிறார். (அவர் வெளிப்படையாய்
சொல்லவில்லை. ஆனாலும் அது பிரபாகரன் அவர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள்
அதிகம்). இலங்கைத் தமிழர்களைச் சிதறாமல் ஒன்று திரட்டி தங்களது
போராட்டத்தில் ஈடுபடுத்த எப்படி முடிந்தது என்ற கேள்விக்குத் தான் பெற்ற
பதிலை அப்படியே “ யாழ்ப்பாண நூல்நிலையம் ஓர் ஆவணம்” என்ற நூலுக்கான தமது
மதிப்புரையில் தருகிறார்.

”யாழ்ப்பாணப் பகுதியில் கிராமங்கள் தோறும் தொடங்கப் பெற்ற வாசக சாலைகள்
தான் ஈழப் போரட்டத்தின் மையம்,. அதாவது வாசக சாலையில் நூல்களை வாசிக்க
ஆரம்பித்த இளைஞர்களின் மனநிலையில் ஏற்பட்ட விழிப்புணர்வு ஈழத்
தமிழர்களின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியமைத்து விட்டது.

உலகின் கழுத்தைப் பிடித்துத் திருகி அதன் கவனத்தைப் பல பத்து ஆண்டுகளாக
வைத்திருக்கும் ஒரு பெரும் போராட்டத்தின் மையமே நூலகங்கள்தான் என்பது நூலகங்களின் அழுத்தமான முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இதை சராசரி அரசியல்வாதிகள் உணர்வதில் சிக்கலுண்டு. சராசரிகள் படிக்கப் படிக்க அவனுக்குப் பாதிப்பு என்பதால் சராசரி அரசியல்வாதி இதில் அக்கறை காட்டுவதென்பது அத்தையின் தாடிதான். ஆனால் இடதுசாரி மனங்கொண்ட இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புகள் இதன் அழுத்தம் உணர்வது சமூக மாற்றத்திற்கான இந்த நொடித் தேவையாகும்.தனது வாழ்நாளின் பாதிக்கும் மேற்பட்ட பகல் பொழுதுகளைப் போர்க்களங்களிலேயே செலவு செய்த திப்பு இளைஞர்களையும் புத்தகங்களியும் இணைக்க அக்கறைப் பட்டிருக்கிறான். எத்தகைய வளமையும், பாதுகாப்பும் பாழாய்ப் போக ஒரே ஒரு படிக்காத தலைமுறை போதும். இது உணர்ந்த திப்பு, நூலகத்தின் மீது கவனம் குவித்துள்ளான்.


திப்பு வீழ்ந்ததும் நகைகள் மற்றும் கலைப் பொக்கிஷங்களைச் சுருட்டிக் கொண்டு போன பறங்கியரின் நெற்றியடித்து பாடம் சொன்னது கீழையியல் ஆராய்ச்சியாளன் வில்கின்ஸ் கவர்னர் ஜெனரலுக்கு எழுதிப் போட்ட ஒரு கடிதம். அவன் எழுதினான், “ இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு கிடைத்த ஒப்பற்ற பொக்கிஷம் இது.” அவன் சொன்னது திப்புவின் நூலகத்தை.


அழகூட்டும் ஆபரணங்களையும் வளமை கூட்டும் செல்வங்களையும் பொக்கிஷமென நினைத்து ஞானப் பட்டறையை விட்டுப் போன அறிவினேழைகளாய் தங்களை உணர்ந்த பறங்கியர்கள் அதையும் கொண்டு போனார்கள்.


பொதுவாகவே ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பிற்குட்பட்ட மண்பரப்பில் எஞ்சி நிற்கும் புராதன கலைச் சின்னங்களையும், நூலகங்களையும் அழித்துவிடுவார்கள். ஏனெனில் ஆக்கிரமிப்பிற்கெதிராய் மண்ணின் குடிகளை கிளர்ந்தெழச் செய்யும். நாளந்தா சிதைக்கப்பட்டதற்கும் , பாக்தாத்தை கைப் பற்றிய தைமூர் அங்குள்ள நூலகங்களை எரித்ததற்கும், புஷ் இர்ராகில் இதையே செய்வதற்கும் இதுதான் காரணம்.


எனவே மின் உற்பத்தி, தொழில் வளர்ச்சி, ஆகியவற்றின் மீது செலுத்தப்படும் கவனமும், முக்கியத்துவமும் நூலகங்களின் கட்டமைப்பின் மீதும் திருப்பப்பட வேண்டும்.


இடதுசாரி சிந்தனைக் கொண்ட அமைப்புகள் குறிப்பாக, இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புகள் தங்களது வேலைத் திட்டத்தில் நூலகங்களை உருவாக்குதல், பராமரித்தல், வளர்த்தெடுத்தல் என்பவற்றிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவர்கள் முடிவெடுத்து, இயக்கப் படுத்தி, ஒரே நேரத்தில் கல்லூரிகள், பள்ளிகள், ரயிலடிகள், பேருந்து நிலையங்கள் , கடைவீதி மற்றும் ஜனங்கள் திரளும் பகுதிகளில் உண்டியலடித்தாலே நூலகங்கள் உருவாகும். இவர்களது வல்லமையும் அர்ப்பணிப்பும் அத்தகையது.


நூலகங்கள் கட்டுவது, புத்தகங்கள் குவிப்பது என்பதோடு எதைப் படிப்பது, எதை விடுப்பது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். “கண்டதைப் படிக்க பண்டிதன் ஆவான்” என்பது முதுமொழி. கண்டதையும் கற்க ஏது நேரம் இன்று. நேற்றைவிடவும் வேகமாய்ச் சுழலும் இன்று சொல்லும் பாடம் இதைவிடவும் வேகமாய்ச் சுழலும் நாளை என்பதுதான். கிடைக்கிற சன்னமான நேரத்தில் எதை வாசிப்பது என்பதைத் தேர்ந்தெடுக்கும் தெளிவையும் வாசகனுக்கு கற்றுத் தரவேண்டும்.


மனிதனை ரசிகனாக்குகிற வேலையை ஊடகங்கள் பார்க்கின்றன. நாம் ரசிகனை வாசகனாக்க வேண்டும். இந்நிலையில் இருக்கிற வாசகனும் ரசிகனாவது ஆபத்தானது. வாசகனை ரசிகனாக்குவது உலகமயமாக்களின் ரகசிய வேலைத் திட்டங்களில் ஒன்று. இதன் விளைவிலொரு சிதறல்தான் பாக்கெட் நாவல். பேருந்து ஏறும் போது ஒரு பாட்டில் மினரல் வாட்டரும், ஒரு பாக்கெட்நாவலுமாய் ஏரி இறங்கும்போது இரண்டையும் கிடாசிவிட்டுப் போகும் பழக்கம் வளர்வதை அனுமதிக்கக் கூடாது. காலிக் குப்பியையும் புத்தகத்தையும் ஒன்றாக நினைக்கும் அயோகியத் தனத்தை மாற்றியே ஆக வேண்டும்.


வாய்ப்புக் கொடுத்தால் தமிழகம் வாசிக்கும்.


வாசிக்கும் தமிழகம் நிச்சயம் சாதிக்கும்.


சரி, என்ன செய்யலாம்?

Monday, March 28, 2011

கொத்து பரோட்டா & மூன்று புத்தக வெளியீட்டு விழா படங்கள்

 அனைவரையும் வரவேற்கும் “ழ” பத்திப்பகத்தின் நிறுவனரில் ஒருவர் திரு- ஓ.ஆர்.பி .இராஜா
 புத்தகத்தை வெளியிடும் அகநாழிகைபொன்.வாசுதேவன்
 கேபிள் சங்கர் மற்றும் “ழ” பத்திப்பகத்தார்க்கு மலர்செண்டு கொடுக்கும் கவிஞர் நேசமித்ரன்

 வாழ்த்துரையில் “அகநாழிகைபொன்.வாசுதேவன்
 நிகழ்ச்சியை நயமாகவும், நகைச்சுவையுடனும் தொகுத்து வழங்கும் எழுத்தாளர் சுரேகா.
 தனது வாழ்த்துக்களை பதிக்கும் எழுத்தாளர் நேசமித்ரன்
 கேபிள் சங்கரிடம் தங்களின் நட்பின்  நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் எழுத்தாளர் விஜய்மகேந்திரன்

நன்றியுரையாற்றும் கொத்துபுரோட்டா நாயகன் கேபிள் சங்கர்!
“ழ”பதிப்பகத்தின் நான்கு புத்தகங்களுக்கான வெளியீட்டு நிகழ்வு இனிதே நிறைவேறியது. ராஜமாணிக்கம், ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார், பொன்.வாசுதேவன், சாமிதுரை, ஆகியோர் ஆளுக்கொரு புத்தகங்களை வெளியிட, லக்கி, முத்து, நேசமித்ரன், மணிஜி ஆகியோர் முறையே ஆளுக்கொரு புத்தகங்களை  பெற்றுக்கொண்டனர், நிகழ்வு  சிறப்பாக நடந்தேறியது.
நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக  நண்பர் சுரேகா தொகுத்தளித்தார்.   ஒரு சந்தோஷ விஷயம் புதிய எழுத்தாளராய் அவதரித்திருக்கும் நண்பர் என்.உலகநாதனின் புத்தகங்கள் இது வரை ஆன்லைனில் என்பதுக்கும் மேல் புக் ஆகியிருப்பது மகிழ்ச்சிக்குறிய விஷயம். அது மட்டுமில்லாமல் கே.ஆர்.பி செந்திலின் பணம், என்னுடய் கொத்து பரோட்டாவுக்கும் கிடைத்திருக்கும் ஆதரவும் நம்பிக்கைத் தருகிறது. பதிப்பகத்தையும், எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும்  பொருட்டு  சென்னை  எல்டெக் நிறுவனர் திரு. ஜெயபால் அவர்கள் எல்லாப் புத்தகங்களிலும் நூறு பிரதிகளை  புக் செய்து  அசத்தினார். அவருக்கு ஒரு சபாஷ்! .  மற்றும் கலந்து கொண்ட அத்துனை இனிய நெஞ்சங்களுக்கும் நன்றிகள் பல.

Tuesday, March 15, 2011

தோழர் விஜய பாஸ்கரன் நினைவஞ்சலி


சரஸ்வதி பத்திரிகையை 1955ல் துவங்கியவரும், சோவியத்நாடு பத்திரிகை ஆசிரியர் குழுவின் ஆசிரியர்களில் ஒருவருமான தோழர் விஜயபாஸ்கரன் அவர்களுக்கு புகழாஞ்சலி கூட்டம் சென்னையில் கே.கே.நகர் டிஸ்கவரி புத்தகக்கடையில் நடைபெற்ரது. நிகழ்வுக்கு யுகமாயினி இலக்கிய இதழாசிரியர் சித்தன் தலைமை வகித்தார்.  எழுத்தாளரும், விஜயபாஸ்கரனின் சகோதரருமான  வ.மோகனகிருஷ்ணன் அறிமுக உரையாற்றினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் திருப்பூர் கிருஷ்ணன், சிகரம் செந்தில்நாதன், எம்.ஜி.சுரேஷ், பாரதிகிருஷ்ணகுமார், சௌரிராஜன், விஜயமகேந்திரன், அம்பத்தூர் ஆர்.துரைசாமி, கே.பன்னீர்செல்வம், தென்சென்னை மாவட்ட செயலாளர் எஸ்.ஏழுமலை, இசக்கிமுத்து, ஏ.ஏ.எச்.கோரி, தாழைமதியவன், குலசேகர்,மற்ரும் விஜயபாஸ்கரனின் சகோதரி குடும்பத்தினர், இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்று அவரது வாழ்வின் நிகழ்வுகளை நினைவுகூர்ந்தனர்.
சரஸ்வதி காலம் என்னும் மணிக்கொடி காலத்திற்குப்பின்பு, முற்போக்கு இடதுசாரிச் சிந்தனை, அழகியல் குறித்து விவாதித்து அவரது இலக்கியசாதனைகளை புகழஞ்சலி செலுத்தினார்கள்.
மூத்த இலக்கியவாதி தி,க,சி அவர்கள் விஜயபாஸ்கரன் குறித்தான நினைவுகளை கட்டுரையாக எழுதி அனுப்பியிருந்ததையும், திருச்சி உயிரெழுத்து இதழாசிரியர் சுதீர்செந்தில், தஞ்சை சௌந்திரசுகன் இதழாசிரியர் சுகன் அனுப்பியிருந்த அஞ்சல் கடிதங்களையும் திரு.சித்தன் வாசித்தார். திகசியின் கட்டுரை அமர்வில் விஜய்பாஸ்கரன் மீதான ஒரு முழுமையான தோற்றத்தை அளித்தது.  இலக்கிய உலகில் வருங்கால தலைமுறை விஜயபாஸ்கரனின் வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் சில தகுந்த திட்டங்களை செயல்படுத்திட வேண்டும் என ச.செந்தில்நாதன் அமர்வில் முன்வைத்தார்.

Monday, January 31, 2011

2010 டிசம்பர் மற்றும் 2011 –ம் ஆண்டு வெளிவந்த சில புத்தகங்கள்: பட்டியல்-11.        ஆமென்(ஒரு கன்னிகாஸ்திரீயின் தன் வரலாறு)சிஸ்டர் ஜெஸ்மி;தமிழில்: குளச்சல் மு. யூசுப்; ரூ. 150ஆமென்
2.        ஒரு சூத்திரனின் கதை(தன்வரலாறு).என். சட்டநாதன்;. தமிழில்: கே. முரளிதரன், . திருநீலகண்டன்; ரூ. 200
3.        (நவீனஉலககிளாசிக்வரிசை) ராபர்ட்டோ கலாஸ்ஸோ தமிழில்: ஆனந்த், ரவி; ரூ. 290
4.        கடல் (நவீன உலக கிளாசிக் வரிசை) ஜான் பான்வில்; தமிழில்: ஜி. குப்புசாமி; ரூ. 125
5.        அமைதியின்நறுமணம்/கவிதைகள்/இரோம் ஷர்மிலா/ அம்பை; ரூ. 50
6.        மாதொருபாகன்(நாவல்)பெருமால் முருகன்; ரூ. 140
7.        தேவதைகளும் கைவிட்ட தேசம், கட்டுரை/ தமிழ்நதி/ ரூ- 90
8.        மௌனி படைப்புகள்முழுத்தொகுப்பு) தொகுப்பாசிரியர்: சுகுமாரன்; ரூ. 200
9.        பற்றி எரியும் பாக்தாத் (ஈராக் ஆக்கிரமிப்பு பற்றிய வலைப்பதிவுகள்)ரிவர்பெண்ட்; தமிழில்: கவிதா முரளிதரன்;ரூ. 125
10.     இராமன் எத்தனை இராமனடி!(ஆய்வு நூல்) .கா. பெருமாஷீமீ; ரூ. 175
11.     தீண்டப்படாத முத்தம் கவிதை/ சுகிர்தராணி; ரூ. 50
12.     ஒளியிலே தெரிவது, வண்ணதாசன்/ரூ100
13.     இதற்கு முன்பும் இதற்குப் பிறகும் .மனுஷ்யபுத்திரன் கவிதகள் ரூ-190
14.     ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி /சாரு நிவேதிதா/ரூ- 150
15.     லா..ராமாமிருதம் கதைகள்-முதல் தொகுதி/ ரூ- 300
16.     லா..ராமாமிருதம் கதைகள்-இரண்டாம் தொகுதி/ரூ- 300
17.     சுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொகுதி/ரூ- 250
18.     துயில் / நாவல்/எஸ்.ரா /ரூ350
19.     ரெண்டாம்ஆட்டம்/சாருநிவேதிதா/ரூ140
20.     நகுலன் வீட்டில் யாருமில்லை/எஸ். ராமகிருஷ்ணன் /ரூ- 80
21.     தேகம் / சாருநிவேதிதா / ரூ – 90
22.     கற்றனைத்தூறும்:கல்வி குறித்த பதிவுகள் / ரவிகுமார் / ரூ- 85
23.     கடவுளும் சைத்தானும் / சாரு நிவேதிதா / ரூ – 60
24.     கலையும் காமமும்  / சாருநிவேதிதா / ரூ – 100
25.     அதே இரவு அதே வரிகள் /எஸ். ராமகிருஸ்ணன் / ரூ – 150
26.     இருள் இனிது ஒளி இனிது / எஸ்.ராமகிருஸணன் / ரூ -110
27.     மழையா பெய்கிறது / சாருநிவேதிதா/ ரூ – 95
28.     ரசிகமணி டி.கே.சி. கடிதங்கள் / ரூ – 600
29.     தலகீழ் விகிதங்கள்/ நாஞ்சில் நாடன் /ரூ – 225
30.     சினிமா கோட்பாடு / பேலா பெலஸ் / ரூ – 190
31.     சினிமா அனுபவம் / அடூர் கோபலகிருஸ்ணன் / ரூ – 100
32.     பொன்னியின் செல்வன் ஒரே பாகத்தில் / ரூ – 250
33.     கொற்றவை - ஜெயமோகன்/ புதிய பதிப்பு/ ரூ – 390
34.     மீண்டும் ஒரு காதல் கதை- சிறுகதைகள் / கேபிள் சங்கர் / ரூ -90
35.     மயிரு / யாத்ரா/ கவிதை /ரூ – 60
36.     மூன்றாம் பிறை/வாழ்பனுபவம்/நடிகர் மம்மூட்டி / ரூ -80
37.     நத்தை போன போக்கில் /இயக்குநர் மிஸ்கின் கவிதைகள் /ரூ – 100
38.     வைரமுத்துவின் 1000பாடல்கள்-ரூ600
39.     கு..ரா . கதைகள் முழுவதும்/ ரூ -450
40.     அத்திப்பழம் இப்போதும் சிவப்பாகதான் இருக்கின்றன/ஆர்.விஜயசங்கர்- ரூ300
41.     விகடனின் காலப் பெட்டகம்ரூ. 190
42.     அருங்கூத்து . தவசிகருப்பு/ ரூ -250
43.     நாய்வாயில சீல / சிறுகதை/ ஹரி கிருஷ்ணன்/ ரூ- 50
44.     எம்.ஜி.ஆரும் கார்ல்மார்க்சும்/ பாலைநிலவன் கதைகள் /ரூ-200
45.     நீங்கதான் சாவி /சுரேக/ ரூ – 50
46.     காலசக்கரம்,கவிதை/கணேஷ்பாபு/ரூ100
47.     என்வானம் நான்மேகம் /சினிமா கதைகள்/மாசிலா அன்பழகன்/ ரூ- 200
48.     சுகுணாவின் காலைப்பொழுது. சிறுகதை/ மனோஜ்/ ரூ -70
49.     வெயில் திண்ற மழை /கவிதை/ நிலாரசிகன்/ ரூ- 50
50.     ஞாயிற்றுக்கிழமை மதியப் பூனை, கவிதை/ பொன்.வசுதேவன்/ ரூ-70
51.     காற்று கொணர்ந்தகடிதங்கள்/ தமிழச்சி தங்கபாண்டியன்/ ரூ – 40
52.     காலமும் கவிதையும். தமிழச்சி தங்கபாண்டியன் /ரூ -150
53.     பெருகும் வேட்கை, கட்டுரை/ அழகிய பெரியவன் / ரூ – 100
54.     வெள்ளைப் பல்லி விவகாரம்/ லஸ்மி மணிவண்ணன் /ரூ -90
55.     மால்கம் எக்ஸ்./ ரவிகுமார் /ரூ -100
56.     பாப் மார்லி இசைப்போராளி /ரவிகுமார்/ ரூ -110
57.     ஆழ்வதன் அரசியல் /ரவிகுமார்/ரூ-90
58.     அண்டை அயல் உலகம், ரவிகுமார்90
59.     பாம்படம்/தமிழச்சி .பாண்டியன்/ரூ70
60.     சின்னச் சின்ன வாக்கியங்கள்/ பிரெத் பலிசியா/ ரூ190
61.     அம்பர்தோ எகோ / ரூ- 40
62.     பத்திகிலோ ஞானம்/ ரா.எட்வின்/ரூ60
63.     உலோகம் /ஜெயமோகன்/ரூ-100
64.     குவளை கைபிடியில் குளிர்காலம்/ அய்யப்பமாதவன் ஹைகூ /ரூ-60
65.     பரத்தையருள் ராணி லீணாமணிமேகலை கவிதை /ரூ150
66.     அறிதலில்லா அறிதல் /புகாரி/ ரூ110
67.     எதுவும் பேசாத மழைநாள்/நபில்/ரூ45
68.     எனக்கான ஆகாயம்,சக்திஜோதி/ரூ50
69.     நினைவுகளின் நகரம்,நாவல்/ராஜா சந்திர சேகர்/ 100
70.     அனுபவ சித்தனின் நட்குறிப்பு/ ராஜ சந்திரசேகர்/ரூ 70
71.     நிறுவனங்களின் கடவுள்/யவனிக ஸ்ரீராம், ரூ-90
72.     ஸ்ட்ராபெரி/ஸ்ரீசங்கர்/ரூ65
73.     யாருடைய இரவென தெரியவில்லை/சுதிர் செந்தில்/ ரூ55
74.     சு.தமிழ்செல்வி சிறுகதைகள்/ ரூ95
75.     தையலை போற்றுதும்./கரிகாலன்/ரூ45
76.     சிரிக்கும் ரோபோவையும் நம்பக்கூடாது /நகரத்தின் கிருஷ்ணா/ ரூ65
77.     மூன்று நாவல்கள் /வெ.சுப்ரமணிய பாரதி/ரூ 220
78.     பொன்னச்சாரம்,நாவல்/சு.தமிழ்செல்வி/ரு115
79.     யாக்கை/லஷ்மி சரவணகுமார்/ ரூ70
80.     Shah commission Report- Era. Sezhiyan/ரூ-900

இது ஒரு சிறு தகவல்தான் , இன்னும் பட்டியல் தொடரும். நண்பர்களும் புத்தகங்களை பரிந்துரைக்கவும்.