நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Saturday, December 11, 2010

டிஸ்கவரி புக் பேலஸ் இரண்டாம் ஆண்டு துவக்கம் மற்றும் புத்தக வெளியீட்டு விழா

வணக்கம் தோழ தோழியரே..!
டிஸ்கவரி புக் பேலஸ் ஆரம்பிக்கப் பட்டு ஓராண்டு நிறைவு பெறுகிறது. இரண்டாம் ஆண்டு துவக்கத்தினை ஆரவாரமாக கொண்டாட அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது! அதோடு முதல் முறையாக பதிப்புத்துறையில் கால் பதித்து முதல் புத்தக வெளியீடும் நடக்க விருக்க்கிறது. அமுத சுரபி பத்திரிக்கையாசிரியரும் , எழுத்தாளருமான திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் இயக்குநர் N. லிங்குசாமி அவர்கள் இரண்டாம் ஆண்டை துவங்கி வைத்து புத்தகம் வெளியிடுகிறார். கவிஞர் நா.முத்துக்குமார் , பத்திரிக்கையாளர் ஞாநி ,ஒளிப்பதிவாளர் திரு செழியன் ,பேராசிரியர் இராமகுருநாதன் மற்றும் யுகமாயினி சித்தன் அவர்கள் கலந்து கொள்கிறார்கள், அனைவரும் வருகை தாருங்கள்!