நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Tuesday, May 11, 2010

நமது டிஸ்கவரியில் கிடைக்கும் புத்தகங்கள் பற்றிய படங்களும், குறிப்பும்

வாழ்பனுபவங்கள் கோடி. ஒவ்வொரு கணமும் அனுபவமே. வீட்டில் குழந்தைகள் வளரும்போது ஒவ்வொரு கணமும் பொற்கணமே. பார்க்க நமக்குக் கண்ணிருக்கவேண்டும். அனுபவங்களில் இருந்து தொடங்கி மேலும் சில தூரம் பறந்து காற்றில் எழுவதற்கான முயற்சிகள் இவை. "இந்நூலைத் தொடுபவன் என்னைத் தொடுகிறான்" என்றார் ஓர் எழுத்தாளர். இச்சிறு நூலைப் பற்றி அதைச் சொல்லத் துணிவேன்.
 * நூலாசிரியர்: ஜெயமோகன்
*Weight 140.00 gms  
* Pages 128
* Price: Rs. 80.00 ,          * தொடர்புக்கு:  +91  9940446650
  .................................................................................................நாவல் என்றால் என்ன? கதை, சிறுகதை, நெடுங்கதை, நாவல் - இவற்றுக்கு இடையே என்ன வித்தியாசம்? தமிழில் எழுதப்பட்ட ‘நாவல்கள்’ என்று சொல்லப்படுபவை உண்மையிலேயே நாவல்கள்தானா? இதுபோன்ற கேள்விகளை எழுப்பும் ஜெயமோகன் அந்தக் கேள்விகளுக்கு, தெளிவான, தருக்கபூர்வமான பதில்களை நிறுவுகிறார்..ஒரு தேர்ந்த வாசகனது ரசனையை மேம்படுத்துவதில் இந்த நூல் வெற்றி அடைகிறது என்றே சொல்ல வேண்டும்.

நூலாசிரியர்: ஜெயமோகன்
* வகை: கட்டுரை
* Weight 160.00 gms
                                     * Pages 144
                                     * Price: Rs. 100.00,   * தொடர்புக்கு:   +91 9940446650
 ...........................................................................................................................
  ஆதாம், ஏவாள் காலம் முதல் மனிதனை சுழற்றியடிக்கும்  ஒரு   மந்திர சக்தி, காதல். காதல்தான் பல சாம்ராஜ்ஜியங்களை  அழித்திருக்கிறது. ஆனால் அதே காதல்தான் பல சாதாரண மனிதர்களை சாதனையாளராக உயர்த்துவதற்கும் தூண்டுகோலாக இருந்திருக்கிறது.இதன் ஒவ்வொரு அத்தியாயமும் காதலை வெற்றிகொள்ள ஒரு படிக்கல். இனி காதலும் காதலியும் உங்கள் உள்ளங்கையில்.
         * நூலாசிரியர்: ரிச்சர்ட் டெம்ப்ளர்
         * வகை-கட்டுரை
        * Weight 250.00 gms
         * Pages 229
         * Price: Rs. 150.00,   * தொடர்புக்கு:  +91 9940446650

                                    
 ....................................................................................................................................

 
 மூன்றுநாள் சொர்க்கம்
 * வகை- நாவல்
* Weight 108.00 gms
* Pages 72
* Price: Rs. 50.00           * தொடர்புக்கு: +91 9940446650                                               

.............................................................................................................................................                                              
                                            மனுஷ்ய புத்திரனின் இந்தக் கவிதைகள்
காட்டும் உலகம் நாம் பிறரிடம் இருந்து மறைத்துக்கொள்ள விரும்பும் நம்முடைய உலகமேதான். அதனால்தான் இது சஞ்சலப்படுத்துகிறது. நம் அந்தரங்கத்தை அவ்வளவு மிருதுவாகத் தொடுகிறது. அவமானத்தையும் வாதையையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பதைச் சொல்லித் தருகிறது. ஒரு உளவாளியைப் போல நம் மறைவிடங்களைக் கண்காணிக்கிறது. 
                       வகை  :  கவிதை
                      விலை  :   ரூ-150
    தேவைக்கு தொடர்புகொள்ளவும்- +91 9940446650
........................................................................................................


சாரு நிவேதிதா கடந்த ஓராண்டில் சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் இவை. தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா எனப் பல்வேறு தளங்களில் இக்கட்டுரைகள் எழுதப் பட்டுள்ளன. மிகவும் பேசப்பட்ட பல படங்கள் பற்றிய உடனடியான விமர்சனங்களைப் பதிவு செய்து வந்திருக்கும் சாரு நிவேதிதா சினிமாவின் அழகியல் மற்றும் அவை முன் வைக்கும் மதிப்பீடுகள் குறித்து இக்கட்டுரைகளில் துல்லியமாக தன் பார்வைகளை முன்வைக்கிறார்.

                      வகை  : சினிமா கட்டுரைகள்
                      விலை  :   ரூ-75
   தேவைக்கு தொடர்புகொள்ளவும்- +91 9940446650
.................................................................................................................................................................

No comments:

Post a Comment