நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Monday, March 29, 2010

எழுத்தாளர்களுக்கு இனிய செய்தி

இன்று உலகம் முழுக்க கணினி –இணையம் என்று படைப்புகள் அனைத்தும் வேகமாக டிஜிட்டல் மொழியாக வளர்ந்துவரும் சூழலில், பொதுவாக அச்சு ஊடகமும், அவற்றை படிக்கும் வாசகர்களும் குறைந்துகொண்டே வருகிறார்கள் என்பதே உண்மை. அதே சமையம் புதிய படைப்பாளிகளின் வருகையும், அவர்களின் எழுத்தார்வமும் முன் எப்போதும் இருந்ததை விட வேகமாக பெருகிக்கொண்டேதான் இருக்கிறது.பொதுவாக நமக்கும் பேருந்து பயணதிலும், தனிமையான சூழல்களிலும் ஏன் எல்லா நிலையிலும்கூட புத்தகம்தான் படிப்பதற்கு வசதியாக உள்ளது. அதனால்தான் அச்சாக வெளிவரும் புத்தகங்கள் மீது இன்னும் கொஞ்சம் நம்பிக்கை மிச்சமிருகிறது. அந்த நம்பிக்கையே மூலதனமாக வைத்து, நல்ல படைப்புகளை அச்சேற்றி ஆவணப்படுத்தும் உயரிய நோக்கோடு நண்பர் செந்தில் “குரல் வெளியீடு” என்ற பெயரில் ஒரு பதிப்பகம் ஆரம்பித்துள்ளார். ஆர்வமுள்ள எழுத்தாளர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.


தொடர்புக்கு;
குரல் வெளியீடு
செந்தில்குமார்
9566049592
senthiljj1979@gmail.

No comments:

Post a Comment